சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கிராமப்புற சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு அவ்வப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து சிறு, சிறு விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைத்துதர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.