மயிலாடும்பாறையில் இருந்து பொன்னன்படுகைக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.