சேலம் மாவட்டம் தும்பிப்பாடி முதல் முள்ளிச்செடி வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தார்ச்சாலை குறுகலாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஸ்கள் வந்து செல்லும் பகுதி என்பதால், பஸ்கள் செல்ல சிரமப்படும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் குறுகலாக அமைக்கப்படும் தார்ச்சாலையை விரிவுபடுத்துவார்களா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.