பழனி ரெனகாளியம்மன் கோவில் சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஜல்லிக்கற்களை அகற்றிவிட்டு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.