செங்கல்பட்டு மாவட்டம், பையம்பாடி கிராமத்தில் உள்ள முக்கிய சாலை மிகவும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, அந்த சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.