பெரம்பலூர் ரோவர் பள்ளி சாலையில் இருந்து எளம்பலூரை இணைக்கும் சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணி முடிந்தவுடன் பள்ளம் மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளம் மூடப்பட்டுள்ள பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.