புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே திருக்கட்டளை முதல் கேப்பரை வரையிலான 3 கிலோமீட்டர் தூரம் உள்ள இணைப்பு சாலை நீண்ட காலமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.