தேவூரில் இருந்து அம்மாபாளையம் போலீஸ் நிலையம் வழியாக வாய்க்கால் கரை தார் சாலை செல்கிறது. புதிதாக போடப்பட்ட இந்த தார் சாலையில் ஆங்காங்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் இருளில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தேவூர் போலீஸ் நிலையம் செல்லும் சாலையில் போடப்பட்ட வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி சாலையில் மின்கம்பங்களில் தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.