சாலையை ஆக்கிரமித்த மரம்

Update: 2026-05-03 10:59 GMT

சென்னை கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலையில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் உள்ள மரம் ஒன்று ஆபத்தான முறையில் சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்துள்ள மரத்தை முறையாக சீரமைக்கவேண்டி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றர்.

மேலும் செய்திகள்