கோவை-ஊட்டி சாலையில் ஜோதிபுரம் சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறையினரால் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை குழி மூடப்படாமல் உள்ளது. அங்கு தடுப்பு ஏதேனும் வைத்தால் கூட விபத்து நிகழாமல் இருக்கும். தற்போது கோடை விடுமுறை காரணமாக அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் குழி கிடப்பதால் அந்த வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. பகலில் குழி இருப்பது தெரிந்தாலும், இரவில் தெரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த குழியை உடனடியாக மூட ேவண்டும்.