ரவுண்டானா அமைக்க வேண்டும்

Update: 2026-08-09 14:16 GMT

வேப்பனப்பள்ளியில் குப்பம் கூட்ரோடு சாலை சந்திப்பு உள்ளது. இச்சாலையின் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பலதரப்பட்ட கடைகள் இருப்பதாலும் இந்த பகுதி எப்போதும் மக்கள் நிறைத்து பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு நிறுத்தப்படும் ஆந்திரா மற்றும் கர்நாடக பஸ்கள் வேப்பனப்பள்ளி பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதில்லை. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே குப்பம் சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்