குண்டும், குழியுமான சாலை

Update: 2026-04-26 16:40 GMT
கடலூர் குண்டுஉப்பலவாடி- பெரியசாமி நகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கி விபத்துகளை சந்திக்கின்றனர். மேலும் வாகனங்களும் பழுதடைவதால் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்