திண்டிவனம் அடுத்த ஆற்காடு-வெள்ளிமேடுபேட்டை வரையிலான சாலை விரிவாக்கப்பணிகள் முடிந்துள்ளன. ஆனால் வௌ்ளிமேடுபேட்டை-திண்டிவனம் வரையிலான 13 கி.மீ. சாலை விரிவாக்க பணி மட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.