கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வாங்கப்பாளையம், முத்துநகரில் உள்ள 5 தார்சாலைகள் மிகவும் மோசமாகவும், குண்டு, குழியுமாக இருந்தது. இந்த சாலைகள் ஒரே நேரத்தில் தோண்டப்பட்டு, பணிகள் தாமதமாக நடந்தது வந்தது. சாலைகளில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவித்ததுடன், பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.