பொங்கலூரை அடுத்த தேவணம்பாளையத்தில் இருந்து ராமம்பாளையம் வழியாக வேலம்பட்டிக்கு தார் சாலை செல்கிறது. சுமார் 2.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த வழியாக ஏராளமான பள்ளி வாகனங்களும் செல்வதால் அடிக்கடி விபத்துகளும் வாகன பழுதும் ஏற்பட்டு வருகிறது. எனவே பல்லங்குழி சாலையை உடனடியாக மேம்படுத்தி புதிய தார்சாலையாக அமைக்க அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
விஜயன், பொங்கலூர்.