விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு முதல் அத்தியூர் திருக்கை வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார்பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.