மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூர்- திருவண்ணாமலை செல்லும் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இவ்வழியாக தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர். சாலையில் உள்ள பெரிய பள்ளங்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.