தியாகதுருகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளன. இதனால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் சிக்கி கீழே விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், வாகனஓட்டிகள் வேகத்தடைகளில் இடறி கீழே விழுவதும் தொடர்கதையாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என சமூகஆா்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.