வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-04-26 16:00 GMT

கரூர் மாவட்டம் புன்செய் தோட்டக்குறிச்சி, மெயின் சாலை மிகவும் ஆபத்தான வளைவு பாதையாக உள்ளது. இவ்வழியாக கரூர் முதல் வேலூர் வரை செல்லும் நகர பேருந்து, கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில், ஒரு பக்கம் வாகனம் வருவது எதிர்புரம் தெரியாது. ஹாரன் அடித்துக் கொண்டு வந்தால் தான் நேருக்கு நேர் விபத்து ஏற்படாமல் இருக்கும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஹாரன் அடிக்காமல் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க இருபுறம் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்