திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் இருந்து பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையின் குறுக்காக சாக்கடை கால்வாய் பாலம் உள்ளது. அந்த பாலத்தையும் சாலையையும் இணைக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.