பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் சில இடங்களில் தார்சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த சாலைகளை தார்சாலையாக மாற்றுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு சாலைகளில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் தார்சாலை அமைக்கப்படாமல் தற்போது பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க வேண்டும்.