ஜல்லிக்கற்களால் விபத்து

Update: 2026-04-26 13:54 GMT

சேந்தமங்கலம் மேற்கு கடை வீதி பகுதியில் இருந்து பச்சுடையாம்பட்டி செல்லும் சாலை அமைந்துள்ளது. அங்குள்ள மார்க்கெட் பகுதியில் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டதால் அதில் ஜல்லிக்கற்கள் கொட்டி மூடப்பட்டன. ஆனால் அந்த பள்ளத்தில் இருந்த ஜல்லிக்கற்கள் கனரக வாகனங்கள் செல்லும் போது பெயர்ந்து சாலையில் பரவி கிடக்கின்றன. இதனால் சைக்கிள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளத்தை முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்