சேலம் சின்னத்திருப்பதி அய்யனார் கோவில் தெரு சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் கார், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கும் பகுதியாகும். அப்பகுதியில் உள்ள தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான தார்ச்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.