பெரம்பலூர் காமராஜர் வளைவு, ரோவர் வளைவு உள்ளிட்ட முக்கியமான இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் அதிகளவில் மக்களை வாட்டி வதைப்பதால் சிக்னல் விழும் வரை வாகன ஓட்டிகள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும்.