சென்னை சைதாப்பேட்டை, சுப்பிரமணியன் சாலை மிகவும் பரபரப்பான சாலை. அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்லும். இந்த சாலையில் அருகில் வசிப்பவர்கள் ஆடு, மாடுகளை சாலையில் விடுகிறார்கள். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.