ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவ்வப்போது வாகனங்களும் பழுதாகின்றன. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?