பொற்றையடியில் இருந்து ஆண்டிவிளைக்கு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் பொற்றையடி பகுதியில் தார்சாலையில் ஓரம் வரை மண் இடிந்து கொட்டையடி கால்வாயில் விழுந்த வண்ணம் காணப்படுகிறது. இதனால் சாலையின் ஓரமாக வரும் வாகனங்கள் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் ஓரத்தில் விபத்து தடுப்பு பக்கச்சுவர் அமைப்பார்களா?.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.