களக்காடு யூனியன் தம்பிதோப்பு பகுதியில் இருந்து களக்காடு காமராஜர் சிலை வரையிலும் சாலையோரம் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. பின்னர் குழியை மூடிய பின்னர் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.