புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வளநாடு பகுதியில் பிரசித்தி பெற்ற தூண்டி கருப்ப சாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இக்கோவிலுக்கு செல்லும் சுமார் அரை கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.