பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள தில்லைநகர் நுழைவுவாயில் பகுதியில் குழாய் பதிக்கும் பணிக்காக சாலையோரம் குழிகள் தோண்டப்பட்டது. குழிகள் தோண்டப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் மூடிப்டாமல் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குழிகளை மூடி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.