புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனை, மணிபள்ளம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காமராஜர் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலேயே சாலை பணிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால், சாலையில் வாகனங்கள் முந்தி செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.