ஆறுகாணி பகுதியில் இருந்து அணைமுகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக ஓடையும், அதன் மீது சிறு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாலத்தில் ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பாலம் உடைந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.