கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் செல்லும் சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த சாலை ஓரமாக ஏராளமான மரங்கள் நிற்கின்றன. இந்த மரங்களின் கிளைகள் சாலை பகுதியில் வளர்ந்துள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோருக்கு மரக்கிளைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பகுதி வரை வளர்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.