சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பெரும்பாலானோர் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.