சேலம் அஸ்தம்பட்டியில் இருந்து குமாரசாமிப்பட்டி செல்லும் வழியில் அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்.