குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் சாலையில் பல இடங்களில் பழுதடைந்து சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும், தண்ணீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளும் சரியான முறையில் நிரப்பபடவில்லை காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின் ஜாஸ்ப்பர், செருப்பாலூர்.