அதிக வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-03-01 11:08 GMT

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் ரோவர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் பின்புறம் உதவி கல்வி அலுவலர் அலுவலகம், வட்டார வளமையம் உள்ளிட்டவை உள்ளன. சுமார் 300 மீட்டர் நீளமுள்ள இந்த சாலையில் 2 தெருக்கள் மட்டுமே குறுக்கிடுவதுடன், ஒரு ஜிக்ஜாக் வளைவு உள்ளது. மேலும் இந்த சாலையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஸ்கேன் மையம், கிளினிக்குகள் உள்ளிட்டவையும் உள்ளன. இந்நிலையில் உதவிக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வெங்கடேசபுரம் பிரதான சாலை வரையுள்ள குறுகிய தூரத்தில் 9 வேகத்தடைகள் உள்ளன. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் முதியவர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் வேகத்தடையில் வாகனத்தை ஏற்றி இறக்கி செல்லும்போது முதுகு தண்டுவட பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே 9 வேகத்தடைகளில் சிலவற்றை அகற்றிட சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்