தார்சாலை வசதி வேண்டும்

Update: 2026-02-22 13:25 GMT

கெலமங்கலம் அடுத்த எச்.செட்டிப்பள்ளி பஞ்சாயத்து மாருதி நகர் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுநாள்வரை எந்தவித பலனுமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்