சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2026-02-22 13:14 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணையின் கிழக்குப் பகுதியில் வடக்கு நோக்கி செல்லும் சாலையில்  தார்ச்சாலை அமைப்பதற்காக கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் பல வாரங்கள் ஆகியும் தற்போது வரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணியை விரைந்து முடித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்