அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரை உள்ள சாலையில் நெடுஞ்சாலை துறையினர் சென்டர் மீடியன் அமைத்துள்ளனர். இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால், சென்டர் மீடியன் இருபுறமும் அதிகளவில் மண் தேங்கி மேடாக உள்ளது. இந்த மண் காற்றில் பறந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சென்டர் மீடியன் இருபுறமும் தேங்கியுள்ள மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.