புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சாத்தம்பட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சாலை போடப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆவதால், தற்போது முற்றிலும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.