அரியலூர் - கல்லங்குறிச்சி சாலையானது முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஏராளமான வீடுகளும், கடைகளும் உள்ள இந்த பகுதியில் போதுமான மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த வழியில் போதுமான மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.