விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற சாலைகள் பெரும்பாலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலையை அன்றாடம் பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் அவ்வப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைப்பார்களா?