பள்ளிபாளையத்தில் உள்ள புளியங்காடு முதல் பெரிய காடு வழியாக காவேரி ஆர்.எஸ். வரை தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது தார் சாலை குண்டும், குழியுமாகவும், மிகவும் மோசமாக சேதம் அடைந்து உள்ளது. இந்த சாலை நடந்து செல்ல கூட தகுதியற்றதாக இருக்கிறது. எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சீரமைக்க முன் வரவேண்டும்.