விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதியில் என் ஜி ஓ. காலனி பாரதி நகர் வழியில் உள்ள தார்ச்சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிக்கும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.