சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் இச்சாலையில் அன்றாட பயணிக்கும் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த இச்சாலையில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. எனவே சேதமடைந்த இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.