திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பாலம் அருகே திண்டுக்கல் செல்லும் சாலை பகுதியில் பாலத்தின் கீழ்பகுதியில் வரும் வாகனங்களும், மேல் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் வேகமாக வந்து ஒரே சாலையில் இணையும்போது, விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள திண்டுக்கல் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.