வேடசந்தூர் அருகே ஏ.சித்தூரில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலை சேதமடைந்து கிடக்கிறது. மேலும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு பல்லாங்குழி சாலையாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.