சாலையில் பள்ளம்

Update: 2026-02-01 14:06 GMT

நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி ஏரியில் இருந்து மல்லசமுத்திரம் செல்லும் சாலையின் குறுக்கே குழாய் பதிக்க தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்தும் மீண்டும் தார்சாலைைய சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிலர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் பதித்துள்ள பள்ளத்தை மூடி தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்