வெண்ணந்தூர் நடுப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட நரிக்கல் கரடு சுற்றி உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுகுறித்து வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி துறையினர் கவனத்தில் கொண்டு புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.